
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்றையதினம், முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் அலுவலகத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பலரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உணர்வு பூர்வமாக அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது. இதில் யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணணன், அவரது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




