
திருகோணமலையில் போராட்டம் தொடர்கின்றது!
சட்ட விரோதமாகப் புத்தர் சிலை வைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.

திருகோணமலை போராட்டத்தில் இணையுமாறு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள் உறவுகளே.
இயலுமானவர்கள் வந்து இணையுங்கள். அல்லது நாளை உங்கள் காணிக்குள்ளும் புத்தர் வரலாம் – என்றுள்ளது.





