யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.
சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.
குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான மருத்துவப்பீட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.