
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரண்டாம் நாள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைவராத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைசுடரேற்றி அகவணக்கம் செலுத்தியோடு மலரஞ்சலியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.





