
மட்டக்களப்பு ஏறாவூரில் முச்சக்கரவண்டி ஒன்றில் ஜஸ்போதை பொருளை வியாபாரத்துக்காக கடத்திச் சென்ற பிரபல வியாபாரி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) 5 கிராம் ஜஸ்போதை பொருளுடன் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய ஏறார் பெரும் குற்றத்தடுப்;பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு 8.30 மணியவில் நீதிமன்ற வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபேர்து முச்சக்கரவண்டி ஒன்றில் ஜஸ்போதை பொருளை வியாபாரத்துக்காக கடத்திச் சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 5 கிராம் ஜஸ்போதை பொருளுடன் பிரபல வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டி ஒன்றை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருபவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவுஸ்ரீர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.