
டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, இன்றைய தினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தியிலிருந்து மத்தியகல்லரி வரை மாபெரும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அனைத்த அரச திணைக்களங்களும் இணைந்து, அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சாலை ஊழியர்கள், இராணுவத்தினர், பொலிசாருருடன் இணைந்து குறித்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது டெங்கு அபாயம் மிக்க பகுதிகளை அடையாளம் கண்டு சிரமதானம் மூலம் துப்பரவு செய்யமாறு மக்கள் மற்றம் வர்த்தகர்களிடம் 2 நாட்களாக ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது,

இந்த நிலையில் டெங்கு அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களிற்கு எதிராக சுகாதார பணியகத்தினால் வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




