
தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகனம் நான்காம் நாளான இன்று கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் வவுனியா, மன்னால், மல்லாவி ஊடாக பயணித்து மூன்றாம் நாளான நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு சந்தியில் நிறைவடைந்தது.


கிளிநொச்சி சேவைச்சந்தையில் இடம்பெற்ற ஆங்சலி நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் இனப்படுகொலை தொடர்பில் அஞ்சலி உரையாற்றினார்.

