
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் வீரமாநகர் கிராமத்தில் நேற்று மாலை தாயக நினைவேந்தல் ஒழுங்கமைப்புக்குழுவின் அனுசரனையில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு வீரமாநகர் நாகம்மாள் ஆலயத்திற்க்கு முன்பாக இடம் பெற்றது.
நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ந.ஹரிகரகுமார் தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் ஆகியோருடன் பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.








