தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் பருத்தித் துறை முனை கடற்கரை பகுதியில் இடம்பெற்றது.
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக இனப் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக சுடர் ஏற்றி இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம் பெற்றன.
இதில் அஞ்சலி உரைகளை இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஜெயராஜ் மற்றும் முல்லை ஈசன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் இருந்த புறப்பட்டு குறித்த நினைவேந்தல் இடத்திற்கு வருகைதந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த இனப்படுகொலை நினைவு தினத்தில் முன்னாள் பரித்தித்துறை நகர சபை தவிச்சாளர் வேலுப்பிள்ளை நவரத்தினம் மற்றும் பருத்தித்துறை தொகுதி தமிழரசு கட்சி அமைப்பாளர் பயன் உட்பட பல்வேறு தமிழரசு கட்சி இளயஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.