
நாகர்கோவிலில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக நாகர்கோவில் மகாவித்தியாலயம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலை 10:30 மணியளவில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் உடபட்ட முன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கண்டு அஞ்சலி செலுத்தினர்.




