
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது. வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் டிப்புா சந்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டும், நினைவு படங்களிற்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது. இதன்போது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக வர்த்தகர்களின் ஒழுங்குபடுத்தலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

மேலும் கிளிநொச்சி வைத்தியசாலை முச்சங்கர வண்டி தரிப்பிட உரிமையாளர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்விலும் பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி தயாரித்து வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




