
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்றையதினம் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.


இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



