கொஸ்லந்தையில் பயிரடப்பட்ட 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை விசேட அதிரடிப்படையினர் பிடுங்கி அழிப்பு..!

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் பயிரடப்பட்ட  காணி ஒன்றினை நேற்று புதன்கிழமை (17) ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட  225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளதாக கொஸ்லந்த பொலிசார் தெரிவித்தனர்.


விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை குறித்தபிரதேசத்திலுள்ள கஞ்சா செய்கை செய்யப்பட்ட காணியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு அங்கு 15 பேச் நிலப்பரப்பில் பயிரடப்பட்ட 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews