
அரச புலனாய்வு சேவை மற்றும் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையின் மூலம், பெருந்தொகை போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவைப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடலில் வைத்தே குறித்த படகு கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருளை கடத்த பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் சந்தேக நபர்கள் இன்று கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.