
தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு போதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அகவணக்கம் இடம்பெற்றதுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


