
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 5 மணியளவில் ஆரம்பமானது.
பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சைவ கிறிஸ்தவ மதகுருமார் கலந்து கொண்டு பொதுச்சுடரினை ஏற்றினர். 

தொடர்ந்து மெழுகுதிரி ஏந்தியவாறு மக்கள் அஞ்சலி செலுத்தினர். மத தலைவர்களினால் மலரஞ்சலி ஆரம்பிக்கப்பட்டு மலரஞ்சலியும் இடம்பெற்றது. தொடர்ந்து உயிரிழந்தவர்கள் நினைவாக மத பிரார்த்தனையும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




