
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் பகுதியிலும், ஏனைய சம்பவங்களிலும் உயிரிழந்த அத்தனை உயிர்களிற்கும் வணக்கம் செலுத்தும் குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. நிகழ்வில் சைவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றது.
தொடர்ந்து சர்வ மத தலைவர்கள் பொதுச்சுடரை ஏற்றினர. தொடர்ந்து அனைத்து மதங்களையும் உள்ளடக்கி சிறுவர்கள் சுடரினை ஏற்றினர். அதன் பின்னர் கூடியிருந்த மக்கள் ஈகைச்சுடர்களை ஏற்றி உயிரிழந்த அனைவருக்குமாக கண்ணீருடன் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவாக மரக்கன்றுகளையும் பெற்று சென்றிருந்தமை குறிப்பிடத்தக் கது.



