வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் எனும் பெயரில் சிவசேனை, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலரினால் வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் நேற்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டத்தில் ஆறு பேர் கலந்து கொண்டதோடு ஜனாதிபதியினால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸ் அவர்களுடன் தொடர்புடைய லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு குறித்த ஆறு பேரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அத்தோடு ஊழல்வாதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்,
முன்னாள வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜவிற்கு அதராவன சிலரே இந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தியதாக பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் வும்அ டிப்படையில் இன்று காலையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் களமிறக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் குறித்த போராட்டத்தில் 6 பேர் மாத்திரமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.