
இன்றையதினம் காலை 10 மணியளவில், யாழ்ப்பாணம், சங்கரத்தை பங்குரு சனசமூக நிலையத்தில் கறுவா உற்பத்தி தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை வடக்கு மாகாண ரீதியில் இடம்பெற்றது.
பங்குரு சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. சு.புகனகுமார் அவர்களது இந் நிகழ்வில் இலங்கை கறுவா ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ.ஜயசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி, பங்குரு சனசமூக நிலையத்தினர், பொதுமக்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.








