
ஹிந்து சுயம் சேவா சங்கம் நாடளாவிய ரீதியில் பெண் தலைமை தாங்கும்; 10 ஆயிரம் பேருக்கு உலர் உணவு வழங்கும் திட்டத்தினை மட்டக்களப்பில் ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலையத்தில்; நேற்று சனிக்கிழமை (20) ஆரம்பித்து வைத்து முதற் கட்டமாக பெண் தலைமை தாங்கும் 176 பெண்களுக்கு தலா ஒருவருக்கு 25 கிலோ அரிசி 25 கிலோ கோதுமை மா கொண்ட உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

அமெரிக்கா சேவா சர்வதேச பவுண்டேசன் அனுசரணையுடன் ஆறுமுக நாவலர் அமைப்பின் திட்டத்தில் முதற்கட்டமாக பெண் தலைமை தாங்கும் 10 ஆயிரம் பேருக்கு உலர் உணவு வழங்க ஹிந்து சுயம் சேவா சங்கம் திட்டமிட்டது.

இந்த திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலைய மண்டபத்தில் சுயம் சேவா சங்க கிழக்கு மாகாண தலைவர் அருணாச்சலம் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் அதிதிகளாக யுனைற்றற் புத்தகசாலை உரிமையாளர் பி.செல்வராஜா சன்பான்சி கடை உரிமையாளர் சிவபாதசுந்தரம், அபர்ணா தங்;க நகைக்கடை உரிமையாளர் ஆர் சண்முகராசா,
வவுணதீவு இலங்கை வங்கி முகாமையாளர், ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலைய பிரதம குருக்கல் மற்றும் இந்து சமய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு மங்களவிளக்கேற்றி சம்பிராய பூர்வமாக முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பெண்தலைமை தாங்கும் 176 பெண்களுக்கு இந்த உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்தனர்.