
இம்மாதப் பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானியச் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000 விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், இரண்டு ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.இவ்வருடம் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள 650,000 விவசாயிகளுக்கு விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதுடன், இந்த வவுச்சர்கள் மூலம் இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை மாத்திரமே விவசாயிகள் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.