
கல்கிஸை 4 ஆம் ஒழுங்கை பகுதியில் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு உணவக உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
29 வயதான குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்றிரவு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த சந்தேகநபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது தெரிய வந்துள்ளதுடன் அவர்கள் கல்கிஸ்ஸை பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் பலாக்காய்களை உயிரிழந்த உணவக உரிமையாளரிடம் விற்பனை செய்வதற்கு முயற்சித்திருந்த நிலையில் இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.