உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையான ஆமி முகைதீனுக்கு சொந்தமான 39 ஏக்கர் காணி தொடர்பாக சிஜடி விசாரணை இடம்பெற்று வரும் அந்த காணியை நா. உறுப்பினர் ரிஷாட் பதுயுதீன்; செயலாளர் சபீக் போலி ஆவணங்களை முடித்து அதனை தலா ஒருவருக்கு 30 இலச்சம் ரூபா வீPதம் 22 போருக்கு விற்பனைசெய்துள்ள இந்த மோசடி அரசியல் பின்புலமா? நீதி வேண்டும் என ஆமி முகைதீன் என அழைக்கப்படும் பதூர்தீன் முகமட் முகைதீன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையை அண்டிய பகுதியான சிங்கள மீனவ வீட்டுத் திட்டத்திற்கு அருகாமையில் எனது பரம்பரைக்காணி எனது உறவினர் இருவாருக்கும் பங்காக இருந்த 39 ஏக்கர் காணியில் உறவினர்களான இருவரும் அவர்களின் பங்கை எனக்கு சட்டரீதியாக எழுதி தந்தனர்.
இந்த நிலையில் அதனை கடந்த 2019 ம் ஆண்டு ஏப்பில் 16 ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட காணிப்பதிவாளர் பகுதியில் பதிவிற்காக ஒப்படைத்தேன். அதேவேளை அந்த காணியில் 13 ஏக்கர் காணியை தற்போதைய அமைச்சர் நசிஸ் அகமட்டுக்கு விற்பதற்காக அவரிடமிருந்து சட்டரீதியாக சட்டத்தரணி ஊடாக முற்பணமாக 10 இலச்சம் ரூபாவை பணத்தை வாங்கி கொண்டு அந்தப்பணத்தில் அந்த காணியை சுற்றி வேலி அமைத்து அங்கு வழ்வதற்காக சிறிய வீடு ஒன்றை அமைத்திருந்தேன்.
இவ்வாறான நிலையில் கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு தொடர்பாக சஹ்ரானுடன் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் கடந்த 2019 ஏப்பிரல் 24 ம் திகதி ஓட்டுhமவடியில் வைத்து என்னை கைது செய்து எனக்கு சம்மந்தமே இல்லாத மாவனெல்ல புத்தர்சிலை உடைப்பு தொடர்பாக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த என்னை மாவனெல்ல நீதிமன்றம் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் என்னை அனைத்து வழக்குகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்து.
விடுதலை பெற்று வந்த நான் எனது புன்னைக்குடாவில் உள்ள காணிக்குள் சென்ற போது அங்கு வேறு ஒருவர் குடிசை அமைத்துள்ளார் அவரிடம் வினாவியபோது எல் ஓ சபீக் என அழைக்கப்படும் ஏறாவூரைச் சேர்ந்த நா.உறுப்பினரான றிசாட்பதூர்தீன் செயலாளரான சின்னலெவ்வை சபீக் (டுழு) எனது காணிக்கு மோசடியாக போலி ஆவணங்கள் தயாரித்து அதனை 22 துண்டுகளாக பிரித்து ஒரு ஏக்கர் காணியை 30 இலச்சம் ரூபாபடி விற்பனை செய்துள்ளார்.
இந்த காணி சந்பந்தமாக நான் சிறையில் இருந்த போது ஊஐனுயினரால் விசாரணையின் போது முழுவிபரத்தையும் ஊஐனுயினரிடம் கொடுத்துள்ளதுடன் தொடர்ந்து இந்த காணி தொடர்பாக சிஜடியின் விசாரணை செய்துவரும் நிலையில் இதற்கு நா.உறுப்பினரின் செயலாள் எல் ஒ.சபீக் போலி ஆவணங்களை முடித்து எவ்வாறு விற்பனை செய்யமுடியும்
இந்த மோசடியில் அரசியல் பின்புலம் உள்ளதா? நாட்டில் பொருளாதார சிக்கல் எங்களை போல ஏழைகளின் நிலம் காணிகளை இப்படிதான செய்கின்றனர் இப்படியா அரசியல் செய்கின்றனர்; நாட்டைகட்டியொழுப்ப வேண்டியவர்கள் அநியாயம் செய்கின்றனர் அதேவேளை என்னால் மட்டக்களப்பு காணிப் பதிவகத்தில் குறித்த காணிக்கான உண்மைப் பிரதி பதிவுக்காக 16.04.2019ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் 23.04.2019ஆம் திகதி நான் கைது செய்யப்பட்டதால் உண்மைப் பிரதி என்னால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.
தற்போது நான் விடுதலையாகி என்னால் குறித்த காணிக்கான உறுதியை மட்டக்களப்பு காணி பதிவகத்தில் காணாமல் போயுள்ளது. ஆனால் காணிக்கான வுசரந உழில கச்சேரியில் உள்ளதாக பதிவாளரால் கூறப்பட்டது. எனவே இந்த காணி மோசடி தொடர்பில் நீதி விசாரணை செய்து எனது காணியை மீட்டுதருமாhறு ஜனாதிபதியை கோரியுள்ளார்.