
கடந்த 27.04.2023 அன்று டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கமலதாஷ் நிலக்சன் (வயது 26) அவர்களது உடலம், சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்தை அண்மித்த நிலையில் நேற்று முன்தினம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாக சந்தேகிக்கப்பட்ட வேளை, இது ஒரு தற்கொலை என அந்நாட்டு மருத்துவர்களால் அறிக்கையிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சடலத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்தவேளை, விமான நிலையத்தில் வைத்து பரிசோதித்த பொலிஸாரும் மருத்துவர்களும் இது ஒரு கொலை என்றும், சடலத்தை உடனடியாக வழங்க முடியாது என்றும், இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தாயாரின் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் சடலமானது நேற்றையதினம் சுண்டுக்குழியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் நேற்றையதினம் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன.


இந்த சம்பவமானது அவருடன் துபாயில் பணிசெய்த நண்பர்கள் உட்பட அவரது ஊரில் உள்ள அனைவரையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.