
பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா (வயது- 06) என்ற சிறுமியே உயிரிழந்தவராவார்.

மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் மேற்படி மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்று சனிக்கிழமை(27) மாலை விழுந்துள்ளார். சிறிது நேரம் சிறுமியை காணாத நிலை தேடிய போது கிணற்றில் சிறுமி விழுந்தமை தெரிய வந்துள்ளது. உடனடியாக மீட்கப்பட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.