யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து, இன்றைய தினம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய தியாகராசா சந்திரதாஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.