
உறவினர் ஒருவரின் மரண செய்தியை மற்றொரு உறவினருக்கு சொல்ல சென்றிருந்த முதியவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை சனிக்கிழமை (27) பார்வையிட சென்றபோது ,
சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலை உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக வைத்தியசாலையில் இருந்து , தனது துவிச்சக்கர வண்டியில் விரைந்த போது , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த கார் மோதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் கார் சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.