
மிருசுவில் வடக்கு மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை 27/05/2023 அன்று பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்க்கு மொருசுவில் மக்களால் ஆழ்துளைக்கிணறு ஒன்று அமைத்து நேற்று 30/05/2023 அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.



இதேவேளை சிறுமி வீழ்ந்து மரணமடைந்த பாதுகாப்பற்ற கிணறு இளைஞர்களழ் இடித்து மணல் நிரப்பி மூடப்பட்டுள்ளது.
நேற்று மூன்தினம் திடீர் முடிவெடுத்த இளைஞர்கள் ஊர் மக்களின் நிதி உதவியை பெற்று இக் குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டமை ஒரு முன்னோடியான செயற்பாடாகும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர் மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த 6 வயதுடைய சசிகரன் கிங்சிகா என்ற. மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வந்த சிறுமி ஆவார்.