
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்றைய தினம் (01) டொலரின் கொள்வனவு விலை 283.87 ரூபாவாகவும் விற்பனை விலை 297.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.