
ஈ.பீ.டீ.பிக்கு சுருக்குவலைகள் உண்டு என்பதை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று 01/05/2023 யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
இன்னறைக்கு தம்பி செபஸ்ரியான் அவர்கள் யாழ் மாவட்ட ஊடக இல்லத்திலே ஒரு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். வடமராட்சி கிழக்கில் 55 சுருக்குவலைகள் இருப்பதாகவும், வர்ணகுல சிங்கம் என்பவர் கட்சி சார்ந்தவர்கள் ஆறு சுருக்குவலை வைத்திருப்பதாகவும், எங்களுடைய பதிலுக்கு அவர் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். இதனால்
அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே ஈழ மக்கள் ஜநாயக கட்சியில் உறுப்பினராக இருந்தவர்.இவர் தேர்தல் கேட்டவர், இவர் தானை தனக்கு சுருக்குவலை இருக்கு தன்னைஒ்ஓல தங்களது ஆக்களிடம் சுருக்குவலை இருக்கு என்று தானே ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைத்தான் நானும் சொன்னேன்
இவரைப்போல வேறு கட்சிக்காரர்களும் ஒருசிலர் வைத்திருக்கிறார்கள்.
இன்றைக்கு கட்சி சம்மந்தப்பட்ட ஆட்களே சசுருக்குவலை வைத்திருப்பதாக ஒப்புக் கொள்ளும்போது கட்சி என்ன செய்யப்போகிறது.
அவர் தான் ஒப்புக் கொண்டுள்ளார். 55 பேரிடம் சுருக்குவலை உண்டு. கடன் பட்டு எடுத்துள்ளேன். கடன் அழிக்கும்வரை நான் சுருக்குவலை செய்வேன்! எல்லோரும் பிடித்த கட்சிக்கு வாக்களிப்பதுதான்
ஆனால் நீங்கள் கட்சி உறுப்பினர்கள்.கட்சியே சட்டவிரோதமான தொழிலை செய்துகொண்டு எவ்வாறு சட்டவிரோதமான தொழிலை நிறுத்த போகிறது.
இன்று வடமராட்சி கிழக்கில் 550தொடக்கம் 600 அட்டை படகுகள், இவர்களில் 170. பேருக்குத்தான் பகலில் அட்டைபிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இன்று இவர்களுக்கு இரவில் கடட்டை பிடிக்க அனுமதி கொடுத்தது யார? பருத்தித்துறையில் வலையில் அட்டை பிடிக்க அனிமதி வழங்கப்படவில்லை. இவ்வளவு காலமும் ஒரு பாதிப்பும் இல்லாமல் வலையில் கடலட்டை பிடித்து வந்தார்கள். உண்மையில் அதனை நம்பித்தான் அந்த குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தது.
இன்று அந்த குடும்பங்கள் பட்டிணி சாவினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.
இன்று 500 படகுகளுக்கு மேல் ஒரு படகில் மூன்று பேர் வீதம் மொத்தம் 1500 இரவு வேளைகளில் கடலில் கடலட்டை பிடிக்க செல்கிறார்கள்.
1500. பேர் கடலில் இறக்கினால் அந்த கடல் எப்படி இருக்கும்.
எங்கள் வளம் முற்றாக அழிக்கப்பட்டு யாழ் மாவட்டத்திலிருக்கின்ற அத்தனை தொழிலாளரும் இன்று பாதிக்கப்படுகிறார்கள்.
இன்று கரை ஓரம் என்றும் சென்று பாருக்கள். கடல் தொழிலிற்க்கே செல்வதில்லை. ஏனெனில் மீன் இல்லை.
இது யார் விடும் பிழை. நீரியல் திணைக்களம் விடும் பிழை. இன்று ஒரு படகிற்க்கு 25000 தொடக்கம் 5000 வரை வேண்டி இருக்கிறீர்கள்.
அது கட்சியாக இருக்கலாம், நீரியல் வளத்துறை அதிகாரிகளாக இருக்கலாம். இன்று வேண்டிக்கொண்டு இரவில் தொழில் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறீர்கள்.
ஆனால் வலையில் கடலட்டை பிடிப்பவர்களுக்கு நீங்கள் அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் பாரம்பரியமாக அந்த தொழிலை செய்து வருகிறார்கள்.
நாங்கள் ஏற்கனவே உடன் பட்டிருக்கிறோம்.யாழ் மாவட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் கடலட்டை பிடிப்பதற்க்கு அனுமதி வழங்குவது என்று. அதுவும் காலை 6:00. முதல் பிற்பகல் ஆறுமணி வரையும் என்று.
சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப் படுத்தவில்லை என்றால் தொழிலை விட்டுட்டு செல்லுங்கள், இப்போது எல்லோரிடமும் வேண்டு பொக்கற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறியள் என்றார்.