
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக, இந்த பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.
அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் தண்டனை நிலுவையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபராதம் உட்பட 40 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நாளையுடன் 20 வருட சிறைத்தண்டனையை அனுபவித்த கைதிகளுக்கே பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.