
நாட்டில் கொவிற் தொற்று நிலைமை நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாகம் இன்று இடம்பெற்றது.
இலங்கையில் உள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் இப் பூஜை வழிபாடு இடம்பெற்றது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து விடுபடுவதற்கு பொன்னாலை வரதராஜாப் பெருமான் ஆலயத்தில் இன்று விசேட யாக பூஜை வழிபாடுகள் இடமம்பெற்றன.
பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள் சோமஸ்கந்த சர்மா மற்றும் நயினை நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே சிறீ விமல ஆகியோர் ஏற்பாடு செய்த இப் பூஜை வழிபாட்டில்
கலகொட அத்துரலிய ஞானசார தேரர் அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.