
யாழ்ப்பாணம் – சுதுமலையில் அமைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் கொடியேற்றுமானது கடந்த 16.05.2023 அன்று ஆரம்பமாகி, தொடர்ந்து 17 திருவிழா நடைபெற்று 18ஆம் நாளாகிய இன்று இரதோற்சவம் நடைபெற்றது.
தேர் இழுக்கும் ஆலயங்களில் மாமிசப் படையல் இடம்பெறுவது இல்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மாமிசப் படையல் இடம்பெறுவது வழமையாகும். யாழ்ப்பாணத்தில் மாத்திரமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து அவளது திருவருளினை பெற்றுச் சென்றனர்.






