
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி திருமதி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாது
கடந்த 03/06/2023 அன்று வடமராட்சி கிழக்கு தளையடி பொதுளையாட்டரங்கிலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவியபோது அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்கப்பட்டபோது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிய சம்பவம் தொடர்பில் அதில் போலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இன்று அதிகாலை மருதங்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை கிளிநொச்சி மாவட்ட உதவி போலீஸ் அத்தியட்சகர் தலைமையிலான மருதங்கேணி போலீஸ் அதிகாரிகள் உட்பட்ட 10 க்கு மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் குறித்த நபருக்கு பிணை வழங்க வேண்டாம் என்று வைத்த விவாதத்தின் அடிப்படையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவரை தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.