
யாழ்.இளவாலை மாரீசன் கூடலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் தேவாலயத்தில் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கூட்டின் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது. அத்துடன் ஆலயத்தின் சுவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. றித்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா என வினவிய போது, இளவாலை பொலிஸார் தகவல் வழங்க முடியாது என மறுத்துள்ளனர்.