இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் 100வது சிறைச்சாலை பாதுகாவலர் அணியினரின் 8 வருட சேவைக்கால பூர்த்தியை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 100 குருதிக்கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் K.B.A உதயகுமார,
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஹேரத்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் Dr.நந்தினி,
யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது சுகாதார பரிசோதகர் ரவீனதாஸ், இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ்.கிளை தலைவர் கோபிநாத், தாதியர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு இங்கு குருதிக்கொடையாளர்களாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்,விசேட அதிரடிப்படையினர், யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள்,
விளையாட்டு கழகத்தினர்,நண்பர்கள்,கிராமத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இங்கு குருதியை வழங்கிய குருதிக்கொடையாளர்களுக்கான சிற்றுண்டிகளையும் சான்றிதழ்களையும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் யாழ்கிளை வழங்கியிருந்தனர்.