
அமரர் சிவசிதம்பரத்தின் 21 வது நினைவேந்தல் நேற்று காலை 8:30 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு சதுக்கத்தில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய செயலாளர் இ.ராகவன் தலமையில் இடம் பெற்றது.






இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுரை இடம் பெற்றது.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலருமான எம்.கே சிவாஜிலிமக்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், உட்பட அரசியல் பிரமுகர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.