கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு நாம் அனைவரும் முகங்கொடுத்துள்ள நிலையில், நாடானது பாரியளவிலான கடன் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கைக்கு அமைவாக இந்நாட்டின் அரசாங்கம் என்ற முறையில் வெளிநாட்டுக் கடனானது டொலர் பில்லியன் 55,916 ஆகக் காணப்பட்டுள்ளது. இன்று 2021 ஆம் ஆண்டு. அந்தக் கடன்தொகையானது தற்போது பாரிளவாக அதிகரித்துள்ளது என்று லங்கா ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் அஜித் சுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (14) செய்தியாளர்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு டொலர் பெறுமதி 178.78 ஆகக் காணப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், 202ஆக உயர்ந்துள்ளது.
இவற்றைப் பார்க்கும்போது நாட்டில் பாரியளவிலான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தின் வேகம் அதிகரித்து வருகின்றது. பணவீக்கத்துடன் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்துள்ளது. வாழ்வாதார நிலைமை கீழ்மட்டத்தை அடைந்துள்ளது.
பொருட்களை வாங்குவதில், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
100 ரூபாயை கடைக்குக் கொண்டுச் சென்றால் ஒரு தேங்காயை மட்டுமே வாங்க முடியம்.
40,000 ஊதியம் எடுக்கும் நபரொருவருக்கு சிறிய தேங்காய் ஒன்றையே வாங்க முடியும்.
இவற்றை அவதானிக்கும்போது மக்களுக்கு வாழ்வதற்கான எதிர்பார்ப்பு மிகவும் கீழ்மட்டத்தை அடைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.