மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொதுமுகாமையாளர் அலுவலக பணம் செலுத்தும் பகுதி சனிக்கிழமைகளிலும் திறக்கும்!

எதிர்வரும் 10ம் திகதி முதல்  சனிக்கிழமைகளிலுமவ  யாழ்.பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தின்  பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10.06.2023 சனிக்கிழமை தொடக்கம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பணம் செலுத்தும் பகுதி திறந்து இருக்கும் என பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews