கஜேந்திர குமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது…!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் சற்று முன்னர்   அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மருதங்கேணி பகுதியில் ஒன்று கூடல் ஒன்றில் பங்கு பற்றிக் கொண்டு இருந்தவர்களை சந்தேகத்திற்கு இடமான இருவர் புகைப்படம் எடுத்த வேளை  அவர்களை அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கோரி இருந்த நிலையில் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் தப்பிச் சென்றுள்ள ஒருவரை பிடிக்க முற்பட்ட போது கஜேந்திரகுமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்னும் ஒருவர் தப்பி சென்று இருந்தார்.  ஒருவர் பிடிக்கப்பட்டு மருதங்கேணி  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை இன்றைய தினம் மருதங்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை  கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் அவர்களிடம் கேட்டபோது அவர் விடயத்தை உறுதி செய்து இருக்கின்றார்.

இதேவேளை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கில் கைது செய்யப்பட்ட மகளிர் அணி தலைவி சற்குணதேவி மற்றும் செல்வராஜ் உதயசிவம் ஆகியோரது வழக்குகள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews