மருதங்கேணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்தவகையில் இன்றையதினம் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைத்துக் கொள்ளப்பட்டு ஆரம்ப கட்ட விசாரணைகள் நான்கு மணிநேரம் நடைபெற்றது.
இது ஆரம்பகட்ட விசாரணை என்பதுடன், பரீட்சை இணைப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸாரும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர்கள் பரீட்சை காரணமாக சமூகமளிக்க முடியவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். அவர்கள் அடுத்தகட்ட விசாரணையின்போது அழைக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்
குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன், இன்று காலை கொழும்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.