
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 60 வயது முதியவரான பெண் ஒருவரை பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட அறை ஓன்றில் நீண்ட காலமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏறாவூர் 3ம் பிரிவு ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான 60 வயதுடைய ஸாகிலா உம்மா என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு வெற்றுக்காணியில் சிறைச்சாலைகள் போல பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட அறையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமான மின்விசிறி மற்றும் ஏனைய வசதிகள் இன்றி சுட்டெரிக்கும் வெய்யில் காலத்தில் சிறைக்கைதியை அடைத்து வைப்பது போல அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரான பெண் வெளியில் சென்று கதைப்பதாகவும் அதன் காரணமாக அவரது மகள் அவரை அடைத்து வைத்துள்ளதாகவும் கம்பி கூட்டின் கதவில் நின்று கொண்டு கதவை திறக்குமாறு தினமும் அழுது புலம்பிவருவதாகவும் தெரியவருகின்றது.