
வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 350 கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 16.06.2023 ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை 08.30 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களை வட மாகாண சபை இணயத்தளம் www.np.gov.lk. வட மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் www.cdumin.np.gov.lk ஆகியவற்றில் பார்வையிட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.