
ஜனாதிபதி மாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் 08/06/2023 இடம் பெற்றது. இதன் போது பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும்,
இச்சந்திப்பில் காணிவிடுவிப்பு தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவும் தேர்தல் தொடர்பாகவும், சிறையில் இருக்கும் அரசியல்கைதிகள் விடுவிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் சிறிதரன் தெரிவித்தார். நேற்றைய தினம் 09.06.2023 கிளிநொச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய மணிமண்டப அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் சில விடயங்களை வெளிப்படுத்தினார்