
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காட்டில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி வந்த மகேந்திரா வாகனம் வே கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்கம்பத்துடன் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த இருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



