
தெஹிவளையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் 69 வயதான வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.