மட்டக்களப்பு மாங்காட்டில் நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்டு ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மாங்காடு கட்டுப் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய தில்லையம்பலம் யூசைமலர் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் கடந்த வியாழக்கிழமை (08) மதிய உணவிற்காக அந்த பகுதியிலுள்ள கடற்கரையில் மீன்வாங்க சென்ற நிலையில் அங்கு மீன் முடிந்த நிலையில் குடும்பத்தைச் மீனவர்களின் வலையில் சிக்கிய நச்சு தன்மை கொண்ட மீனை அங்கு மீனவர்கள் விட்டுச் சென்ற நிலையில் அதனை எடுத்துவந்து சமைத்து சாப்பிட்ட ஒரு மணித்தியாலயத்தில் நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி, அவரது 3 வயதுடைய மகன் அஸ்வின், அவரது தாயாரான யூசைமலர், சகோதரன் 20 வயதுடைய கிறிஸ்ரின் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த நிலையில் 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி உயிரிழந்ததுடன் அவரது மகன் சகோதரன் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் அவரது தாயார் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி றேங்ஞ ஙாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.