
நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று காலை 8:00 மணியளவில் ஆரம்பமாகியது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலமையில் இடம் பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலய பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் மனுர சமன் பெரேர, வடமாகாண பணிப்பாளர் காமினி
யாழ் மாவட்ட பணிப்பாளர் வினோதினி சிறிமேனன்,
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி,
மற்றும் அதிகாரிகள் கலந்தய கொண்டு சம்பிர்தாய பூர்வமாக யாத்திரையை ஆரம்பித்து வைத்தனர். குறித்த யாத்திரிகர்கள் உகந்தை முருகன் ஆலயம் சென்று அங்கிருந்து சுமார் 300 இளைஞர்கள், யவதிகள் நாடளாவியரீதியிலிருந்து யாத்திரை செல்லவுள்ளனர்.