
யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின்போது தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுமக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் தொடர்பிலும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
