
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு 2019 ஆம் ஆண்டு கற்கைநெறிகளுக்காக உள்வாங்கப்பட்ட ஆசிரியர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று சந்தித்து தாங்கள் எதிர்கொண்டுள்ள பாடவியல் சம்மந்தமான சவால்கள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சாத்தியமான வழிவகைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


